நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் ஈரானிய இயக்குநர்!

பிரபல ஈரான் இயக்குநர் முகமது ரசூலோஃப்புக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News image

படம்: கேன்ஸ் பட விழாவில் முகமது ரசூலோஃப் / எக்ஸ்

Updated On :9 மே 2024, 4:33 pm IST

முகமது ரசூலோஃப் எனும் பிரபல ஈரானிய இயக்குநரின் தி ட்விலைட், அயர்ன் ஐஸ்லேண்ட், குட் ஃபாய், மனுஸ்கிரிப்ட் டோன்ட் பர்ன், ஏ மேன் ஆஃப் இன்டக்ரிடி ஆகிய படங்கள் உலகளவில் கவனம் பெற்றன.

52 வயதான முகமது ரசூலோஃப்பின் தி சீட் ஆஃப் சேக்ரட் ஃபிக் அடுத்த வாரம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருந்தது. ஏற்கனவே பல படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்றுள்ளன.

இந்நிலையில் இவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவரது வழக்கறிஞர் தனது எக்ஸ் பக்கத்தில், “தி சீட் ஆஃப் சேக்ரட் ஃபிக் எனும் படத்தினை உரிய அனுமதியின்றி எடுத்திருக்கிறார்; நடிகைகள் சரியாக ஹிஜாப் அணியவில்லை, ஹிஜாப் அணியாமலும் படமாக்கப்பட்டுள்ளதாக வழக்கு பதிவிடப்பட்டுள்ளது.

படக்குழுவின் முக்கியமான நபர்கள் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

Story image

படம்: கேன்ஸ் திரைப்பட விழா இணையதளம்

இதற்கு முன்னதாகவும் முகமது ரசூலோஃப் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2010, 2017, 2020 என பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏ மேன் ஆஃப் இன்டக்ரிடி படம் தங்கப்பனை விருது வென்றது. ஈரானில் விதிக்கப்படும் மரணதண்டனை குறித்தான தேர் இஸ் நோ எவில் எனும் படம் தங்கக் கரடி விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு பிரபல இயக்குநர் ஜாபர் பனாஹியின் சிறைத்தண்டனை கடந்த 2023 பிப்ரவரியில் முடிவடைந்தது. அதன்பிறகு 14 வருடங்களுக்குப் பிறகு அவர் ஈரானை விட்டு வெளியே சென்றதும் குறிப்பிடத்தக்கது.

ஜாபர் பனாஹி

ஜாபர் பனாஹி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.