

கடந்த பத்து ஆண்டு கால தமிழ் சினிமாவில் தனித்துவம் வாய்ந்த தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் சி.வி.குமார். இவர் தயாரித்த "பீட்சா', "சூது கவ்வும்', "தெகிடி' உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
இவர் இயக்குநராக அறிமுகமாகிய "மாயவன்' படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, மைம் கோபி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் அடுத்த பாகமாக ‘மாயஒன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இதில் சந்தீப் கிஷன் உடன் அகான்ஷா ரஞ்சன் கபூர் நடித்துள்ளார்.
இந்தப் படத்தினை ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. இதில் கைதி பட வில்லன் நீல் நிதின் முகேஷ், பப்லு ப்ரித்விராஜ் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.