சல்மான் கான் படத்தில் ராஷ்மிகா!

சல்மான் கான் படத்தில் ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா சல்மான் கான் படத்தில் நடிக்கவிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
Published on

துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை நடிகர் விஜய்-க்கு கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் சுமாரான வரவேற்பினையே பெற்றது.

அடுத்து நடிகர் விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்த பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘எஸ்கே 23’ என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து படம் இயக்குவதாக சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.இந்தப் படத்துக்கு சிக்கந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் 2025 ரமலானுக்கு வெளியாகுமென போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சல்மான் கான் படத்தில் ராஷ்மிகா!
விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

மே மாதம் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்தப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள்ளாக சிவகார்த்திகேயன் படத்தின் பெரும்பகுதியை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

ஜுன் மாதம் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தினை இயக்குவார். ஜூலையில் இருந்து சல்மான் கான் படத்தினை இயக்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சல்மான் கான் படத்தில் ராஷ்மிகா!
‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவில், “நீண்ட நாள்களாக கேட்டுக்கொண்டிருந்த அப்டேட் இதோ. சிக்கந்தர் படத்தில் நான் இணைந்ததற்கு மிகவும் நன்றியுணர்வுடனும் கௌரமாகவும் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com