ஆவேஷத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்!
ஆவேஷம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுக்குப் பின் பெரிதாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.


ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஃபஹத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது.
பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (ஃபகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றது. குறிப்பாக, இலுமினாட்டி பாடலின் இசையும் வரிகளும் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதுவே, நடிகர் ஃபஹத் ஃபாசிலின் அதிகம் வசூலித்த படமாகும்.
இந்நிலையில், ஆவேஷம் அமேசான் ஓடிடியில் நேற்று (மே.9) வெளியாது. திரையரங்கில் காணத்தவறியவர்களில் சிலர், தற்போது ஆவேஷம் படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த காட்சிகளைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, வீட்டிற்குள் ஃபஹத் நடனமாடும் காட்சியும், கிளைமேக்ஸையும் அதிகம் ரசித்து காணொளிகளைப் பதிவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...