அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்படுபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. 2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் தனது 12ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. இவர் இயக்கிய ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டாவின் 13ஆவது படமான ஃபேமலி ஸ்டார் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தினை ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார். ஷியாம் சிங்கா ராய் படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது விஜய் தேவரகொண்டாவின் 14ஆவது படம்.
இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் இவர்களது ஜோடி கலக்கியது. இருவரும் காதலிப்பதாக அடிக்கடி இணையத்தில் வைரலாவதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய நேர்காணலில் ராஷ்மிகா சரியான கதை அமைந்ததும் விஜய்யுடன் நடிப்பேன் எனக் கூறியிருந்தார். தனது 14ஆவது படத்தில் ராஷ்மிகா நடித்தால் சரியாக இருக்குமென விஜய் தேவரகொண்டா ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசி படப்பிடிப்பு நிறைவு!
மே வெளியீடாக டிசி!

ஹாய் நான்னா இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு




