கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ள 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

முன்னாள் இந்திய பிரதமா் இந்திர காந்தி, கடந்த 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினாா். அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தை தயாரித்து, இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி, நடிக்கும் எமா்ஜென்சி  திரைப்படத்தின் படப்பிடிப்பை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த அனுமதி கோரி மக்களவை செயலாளருக்கு கடிதம் அனுப்பி பரப்பினை கிளப்பினார். 

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!
என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படம், வருகிற ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!
அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

இந்நிலையில் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழு கூறியதாவது: எங்களது இதயம் முழுவதும் ராணி கங்கனா ரணாவத் நிறைந்துள்ளார். நாட்டுக்காக அவர் முக்கியமான கடமைகளை ஆற்றுவதால் எமர்ஜென்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுகிறது.

விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். தொடர் ஆதரவுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com