என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

நடிகை ஜான்வி கபூர் மிஸ்டர் & மிஸ்ஸஸ் மாஹி படத்துக்காக 2 ஆண்டுகள் கிரிக்கெட் பயிற்சி செய்ததாகக் கூறியுள்ளார்.
என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் ராவுடன் மிஸ்டர் & மிஸ்ஸஸ் மாஹி திரைப்படம் வரும் மே.31 அன்று வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!
சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஜான்வி கபூர் பேசியதாவது:

2 ஆண்டுகள் கிரிக்கெட் பயிற்சி எடுத்தேன். குட் லக் ஜெர்ரி படத்தின்போதே இதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன். எனது இயக்குநர் மிகவும் நேர்மையானவர். நான் முழுமையான கிரிக்கெட்டராக வேண்டுமென அவர் விரும்பினார். விஎபெக்ஸ் போன்ற எந்த தொழில்நுட்பம் அல்லது மோசடிகளிலும் ஈடுபடாமல் நான் கிரிக்கெட் ஆட வேண்டுமென மெனக்கெட்டார். கிரிக்கெட் உலகில் முழுவதுமாக கலந்துவிடவும் தொடர்பில் இருக்கவும் விரும்பினார்.

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!
‘டியூன் 2’ ஓடிடியில் எப்போது?

இந்தப் பயிற்சியின்போது எனது இரண்டு தோல்பட்டையும் காயமுற்றன. ஆனால் எனது பயிற்சியாளர்களான அபிஷேக், விக்ராந்த் ஆகியோருக்கு பாராட்டுகளைக் கொடுத்தாக வேண்டும். சில நேரங்களில் இதை விட்டுவிடலாம் எனத் தோன்றும். எனது உடல் ஒத்துழைக்காத போதிலும் பயிற்சியாளர்களிடம் இருந்து ஊக்கம் பெற்றேன். சில நேரங்களில் இதனால் கோபமும் விரக்தியும் அடைந்தேன். ஆனால், அவர்களது நோக்கமும் ஆர்வத்தையும் புரிந்து கொண்டேன். தற்போது இவர்களால்தான் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். இதன் பலனை மே.31ஆம் நாள் நீங்கள் திரையரங்குகளில் காண்பீர்களென நம்புகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com