
நடிகர் ஜெய் ஆகாஷ் நடிகை ரேஷ்மா முரளிதரனுடன் இணைந்து புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இதில் ஜெய் ஆகாஷ் நாயகனாகவும், ரேஷ்மா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.
ஜீ தமிழின் முதன்மை தொடர்களான நீதானே என் பொன்வசந்தம், புதுப் புது அர்த்தங்கள், சீதாராமன் ஆகிய தொடர்களை தயாரித்த ஈஸ்தெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இந்த புதிய தொடரையும் தயாரிக்கவுள்ளது.
இதில், புதுப் புது அர்த்தங்கள் தொடரில் ரேஷ்மா நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நாயகனாக நடித்த ஜெய் ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நீதானே என் பொன்வசந்தம் தொடரில் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷனா நடித்திருந்தார்.
தற்போது ரேஷ்மா முரளிதரனுடன் இணைந்து புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடரை ஈஸ்தெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதனால் இத்தொடரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ரேஷ்மா முரளிதரன் விஜய் தொலைக்காட்சியின் கிழக்கு வாசல் தொடரில் நடித்து வந்தார். தற்போது அந்தத்தொடர் முடிந்ததால், புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் இதற்கு முன்பு பூவே பூச்சூடவா, அபி டெய்லர் உள்ளிட்ட தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார். மிஸ் மெட்ராஸ் 2016-ல் இரண்டாம் இடம் பிடித்த ரேஷ்மாவுக்கு சின்னத்திரையின் மூலம் சேர்ந்த ரசிகர்கள் ஏராளம். இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.