மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பார்க்கிங் - 5 மொழிகளில் ரீமேக்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை 5 மொழிகள் பெற்றுள்ளன.

News image
Updated On :20 மே 2024, 12:54 pm

சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானாலும் பியார் பிரேமா காதல் (2018) படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரைப் பெற்றுள்ளார்.

இறுதியாக, ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார்.

இதில், ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து,ஓடிடியில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்று அசத்தியது. மேலும், இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பார்க்கிங் படத்தின் ரீமேக் உரிமையை ஆங்கிலம் உள்பட 5 மொழிகள் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என ரீமேக்கிலும் விற்பனை சாதனை செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.