
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து நடிகர் விஜே விஷால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நவீன் என்ற நடிகர் அறிமுகமாகியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020 ஜுலை முதல் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் எழில் பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் விஷால். தொலைக்காட்சி தொகுப்பாளரான இவர், பாக்கியலட்சுமி தொடரின் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார்.
தெலுங்கிலும் சில தனிப்பாடல்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து ரெடி ஸ்டெடி போ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
பாக்கியலட்சுமி தொடரில் பலரால் விஷாலின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்த நிலையில் அந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். பாக்கியலட்சுமி தொடர் குறித்து எழுந்த சர்ச்சையின் காரணமாக தொடரிலிருந்து விலகினாரா என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும், சில விஷாலின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்த்களையும் தெரிவித்து வருகின்றனர்.
பாக்கியா என்ற பாத்திரத்தை மையப்படுத்தி நகரும் இந்தத் தொடரில், அவரின் கணவன் கோபி மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். கோபியின் மகனாக எழில் பாத்திரத்தில் விஷால் நடித்து வந்தார். அவருக்கு திருமணமாகி குழந்தை பிறக்கவுள்ளது. பாக்கியலட்சுமி தொடரில் மகனும், தந்தையும் குழந்தை பெற்றுக்கொள்ளவுள்ளனர் என பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எழில் பாத்திரத்தில் நடிகர் நவீன் அறிமுகமாகவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.