
நடிகர் சூர்யா - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.
படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2டி மற்றும் 3டியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வியாழக்கிழமை (நவ.14) வெளியாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நவ. 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாள்களுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஹிந்தியில் பெரிதாக புக்கிங் ஆகவில்லை எனக் கேள்வி கேட்டதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
ஹிந்தியின் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை. பிவிஆர் உள்பட பல மல்டிபிளக்ஸில் நாளைதான் தொடங்குகிறது. தென்னிந்தியாவில் தனிப்பட்ட திரையரங்குகள் அதிகம், வட இந்தியாவில் இதற்கு மாறாக மல்டிபிளக்ஸ்கள் அதிகம். அதனால்தால் முன்பதிவு குறைவாக இருக்கிறது. அதனால் கவலை வேண்டாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.