ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சின்னத்திரை தொடரில் மீண்டும் நடிகை கௌதமி!

சின்னத்திரை தொடரில் நடிகை கௌதமி மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

News image
நடிகை கௌதமி.
Updated On :16 நவம்பர் 2024, 12:52 pm

DIN

சின்னத்திரை தொடரில் நடிகை கௌதமி மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

கோலிவுட்டில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் கௌதமி. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் 2015ல் வெளியான பாபநாசம் திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் கவனம் செலுத்தினார்.

சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் கௌதமி. அண்மையில் அதிமுகவில் இணைந்த இவருக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரை தொடர் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

ஜீ தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தொலைக்காட்சி தொடர்தான் அது.

இதில் நாயகி ரேஷ்மாவின் அம்மாவாக கௌதமி நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.