திரையரங்குகளில் ரசிகர்கள் பேட்டிக்கு தடை வேண்டும்! தயாரிப்பாளர் சங்கம்

திரையரங்கு வளாகங்களில் ரசிகர்களை பேட்டி எடுக்க தடை விதிக்க கோரிக்கை விடுத்திருப்பது பற்றி...
திரையரங்கு
திரையரங்குபடம்: Din
Published on
Updated on
1 min read

திரையரங்கு வளாகங்களில் ரசிகர்களை பேட்டி எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பிரபல திரையரங்குகளின் வளாகங்களில் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில் ரசிகர்களை யூடியூப் சேனல்கள் பேட்டி எடுப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்த பேட்டிகளால் தவறான தாக்கம் ஏற்பட்டு மக்களின் கண்ணோட்டம் மாற வாய்ப்புள்ளதால், அதுபோன்ற பேட்டிகளுக்கு தடை விதிக்க கோரி திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

“2024ஆம் ஆண்டில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு மக்கள் பேட்டி (Public Review/Talk) மூலம் பெருமளவில் பாதிப்பை யூடியூப் சேனல்கள் ஏற்படுத்தியுள்ளன.

அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யூடியூப் சேனல்களும் எடுக்க தடை செய்து, இந்த முதல் காட்சி மக்கள் விமர்சனம் (FDFS Public Review/Talk) நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com