தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜி. வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் சைந்தவி!

இசை நிகழ்ச்சியில் பாடும் ஜி. வி. பிரகாஷ் - சைந்தவி...

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:49 am

DIN

ஜி. வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் பாடகியும் அவரது முன்னாள் மனைவியுமான சைந்தவி பாடவுள்ளார்.

தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்தனர். ஜி.வி.யின் இசையும் சைந்தவியின் குரலும் ரசிகர்களின் மனதில் நிலைபெற்றவை.

சில மாதங்களுக்கு முன் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

விவாகரத்துக்குப் பின்பும் இருவரும் இணைந்து சார் படத்தில் ‘பனங்கருக்கா’ பாடலைப் பாடியிருந்தனர்.

இந்த நிலையில், டிச. 7 ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள ஜி. வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் பாடவுள்ளதாக சைந்தவி தெரிவித்துள்ளார். நிகழ்வில், இருவரும் இணைந்து பாடுவார்கள் என்றே தெரிகிறது. விவாகரத்துக்குப் பின் இவர்கள் இணையும் மேடை என்பதால் இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

’விவாகரத்துக்குப் பின்பும் தொழிலில் முதிர்ச்சியாக நடந்துகொள்கின்றனர். இது ஆரோக்கியாமனது’ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.