நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கிய பணி திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர், சூர்யா - 44 மற்றும் கமலுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் இயக்குநராக, ’பணி’ என்கிற படத்தை இயக்கி, நடித்து வந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 25 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.
படத்தின் தமிழ் டப்பிங் வடிவம் நாளை (நவ. 22) வெளியாகிறது. இதற்காக, ஜோஜு ஜார்ஜ் தன் படக்குழுவினருடன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









