ரஜினியுடன் நடிப்பது ஜாலியானது: சத்யராஜ்

ரஜினியுடன் நடிப்பது ஜாலியானது: சத்யராஜ்

நடிகர் ரஜினி குறித்து பேசியுள்ளார் சத்யராஜ்...
Published on

நடிகர் ரஜினிகாந்த் உடனான கூலி பட அனுபவங்களை நடிகர் சத்யராஜ் பகிர்ந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படப்பிடிப்பில் நடிகர் அமீர் கான் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கூலி திரைப்படத்தை அடுத்தாண்டு மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜிடம் கூலியில் ரஜினிகாந்த்துடன் நடித்து வரும் அனுபவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சத்யராஜ், “நடிகர் ரஜினிகாந்துடன் நடிப்பது மிகவும் சந்தோஷமானது. பழைய நினைவுகளைப் பேசி அரட்டை அடித்தோம். எனக்கு 70 வயதாகிவிட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருவரும் செய்யும் உடல் பயிற்சிகள் குறித்தும் பேசுவோம். மேலும், பொதுவான பேச்சுவார்த்தைகளும் இருக்கும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com