
நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் கூட்டணியில் உருவான புஷ்பா திரைப்படம் மாநில எல்லைகளைக் கடந்து இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் ஸ்டைலான நடையும் பாவனையும் உலகம் முழுவதும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக அல்லு அர்ஜுன் மிகப் பிரபலமாகிவிட்டார். இந்த நிலையில், ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று(நவ. 24) பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ லீலா, தயாரிப்பாளர்கள் எஸ் தாணு, அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா - 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்க்கா..’ பாடல் வரிகளை உள்ளடக்கிய விடியோ சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் - ஸ்ரீ லீலாவின் கலக்கலான நடனத்தைக் காண ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் இந்த பாடல் விடியோ இன்று(நவ. 24) வெளியாகியுள்ளது.
‘கிஸ்க்கா..’ பாடல் விடியோவில் தனது க்யூட் ஆன அபிநயங்களாலும் கண் சிமிட்டல்களாலும் ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறார் ஸ்ரீ லீலா. முழுக்க ழுழுக்க ‘ஊ சொல்றியா மாமா..’ பாடலைப் போன்றே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ‘கிஸ் கிஸ் கிஸ்..’ பாடல்!
யூ-ட்யூப் தளத்தில் ‘கிஸ்...’ பாடல் வரிகள் விடியோ வெளியான ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர். 5-ஆம் தேதி ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.