ஜப்பானில் வெளியாகும் புஷ்பா -2! டோக்கியோ சென்றார் அல்லு அர்ஜுன்!

புஷ்பா - 2 திரைப்படம் ஜப்பானில் வெளியாவது குறித்து...
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன்...
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன்...(கோப்புப் படம்)
Updated on
1 min read

ஜப்பான் நாட்டில், “புஷ்பா - 2” திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் அல்லு அர்ஜுன் அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குநர் சுகுமார் ஆகியோரது கூட்டணியில் உருவாகி, கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “புஷ்பா -2”.

இந்தியத் திரையுலகின் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றான “புஷ்பா -2” திரைப்படம் ரூ.1,500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.

நடிகர்கள் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஜகபதி பாபு ஆகியோரது நடிப்பில் வெளியான இப்படம் வரும் ஜன.16 ஆம் தேதி ஜப்பான் நாட்டின் திரையரங்குகளில் வெளியாகின்றது.

இந்த நிலையில், ஜப்பானில் வெளியாகும் “புஷ்பா - 2” படத்தின் புரமோஷன் பணிகளுக்காக இன்று (ஜன. 13) அந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் டோக்கியோ நகரத்துக்குச் சென்றுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன்...
கருப்பு பல்சர் வெளியீட்டுத் தேதி!
Summary

Allu Arjun has traveled to Tokyo, the capital of Japan,for the release of the film "Pushpa - 2" in that country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com