அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்! அறிவிப்பு விடியோ!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் குறித்து...
அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்! அறிவிப்பு விடியோ!
Updated on
1 min read

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விடியோ வெளியானது.

மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக உருவானவர் லோகேஷ் கனகராஜ்.

இவரது, இயக்கத்தில் உருவாகும் 7 ஆவது திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கின்றார். இப்படம், நடிகர் அல்லு அர்ஜுனின் 23 ஆவது திரைப்படம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு விடியோவை படக்குழுவினர் இன்று (ஜன. 14) வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

முதல்முறையாக இணைந்துள்ள லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிகழாண்டில் (2026) துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்! அறிவிப்பு விடியோ!
சபரிமலையில் இயக்குநர் ரத்னகுமார் இருமுடி கட்டி தரிசனம்!
Summary

The introductory video for the new film starring actor Allu Arjun and directed by Lokesh Kanagaraj has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com