சபரிமலையில் இயக்குநர் ரத்னகுமார் இருமுடி கட்டி தரிசனம்!

சபரிமலையில் இயக்குநர் ரத்னகுமார் சாமி தரிசனம் செய்துள்ளது குறித்து...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இயக்குநர் ரத்னகுமார் சாமி தரிசனம்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இயக்குநர் ரத்னகுமார் சாமி தரிசனம்... Insta/ Rathna kumar
Updated on
1 min read

இயக்குநர் ரத்னகுமார் சபரிமலை ஐயப்பன் சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

மேயாத மான், குலு குலு போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்படுபவர் இயக்குநர் ரத்னகுமார்.

இவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், லியோ, விக்ரம் போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமார் இருமுடி கட்டிக்கொண்டு புதன்கிழமை (ஜன. 14) உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் சாமி கோயிலில் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது தயாரிப்பில் “29” எனும் புதிய திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், நடிகர்கள் விது மற்றும் பிரீத்தி அஸ்ரானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இயக்குநர் ரத்னகுமார் சாமி தரிசனம்...
ரோட்டர்டம் திரைப்பட விழாவுக்குத் தேர்வான பராசக்தி!
Summary

Director Rathnakumar has visited and offered prayers at the Sabarimala Ayyappan temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com