நடிகை நயன்தாராவின் மகன்கள் பாடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் 2022, ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சில மாதங்கள் கழித்து வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர். உயிர், உலக் என பெயரிடப்பட்டுள்ள மகன்களின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு விக்னேஷ் சிவனும் நயனும் மகிழ்ச்சியடைகின்றனர்.
இதையும் படிக்க: வணிக தோல்வியைச் சந்தித்த கங்குவா?
சமீபத்தில் இவர்களின் திருமண விடியோ நெட்பிளிக்ஸில் வெளியானது.
இந்த நிலையில், விக்னேஷ் சிவன் தன் மகன்கள் இருவரும் நானும் ரௌடிதான் படத்தில் இடம்பெற்ற, ‘தங்கமே உன்னத்தான்’ பாடலில் இடம்பெற்ற, ‘அடடடா... அய்யய்யோ...’ வரிகளைப் பாடும் விடியோவை வெளியிட்டுள்ளார்.
குழந்தைகள் இருவரும் மழலைக்குரலில் வரிகளைப் பாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிர்ச்சி தோற்றம்! நடிகர் சல்மான் கானுக்கு என்ன ஆனது?

எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் ஊழியா்களுக்கு 25 % வரை ஊதிய உயா்வு: அமைச்சா் விக்னேஷ் அறிவிப்பு

கெட்டி மேளம் தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பு படங்கள்! இணையத்தில் வைரல்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



