ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

நயன்தாராவின் 60 அடி உயர கட்-அவுட்..! வியந்து பதிவிட்ட ரெஜினா!

நடிகை நயன்தாராவின் 60 அடி உயர கட்-அவுட் குறித்து நடிகை ரெஜினா கேசண்ட்ரா கூறியிருப்பதாவது...

Regena Cassandra

நயன்தாராவின் 60 அடி உயர கட், ரெஜினா கேசண்ட்ரா. - படங்கள்: எக்ஸ் / ரெஜினா கேசண்ட்ரா

Updated On :

மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நடிகை நயன்தாராவிற்கு 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகை ரெஜினா கேசண்ட்ரா வியந்து பாராட்டியுள்ளார்.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அம்மனாக மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் நவ.6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படத்துக்காக நடிகை நயன்தாராவிற்கு சென்னையில் செம்பரம்பாக்கத்தில் வேல்ஸ் திரையரங்கில் 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடிகைக்காக வைக்கப்பட்டுள்ள உயரமான கட் அவுட் என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சக நடிகை ரெஜினா கூறியிருப்பதாவது:

இந்த நாள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு நடிக்கைக்கு படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக இவ்வளவு உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் 60 அடி உயரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெற்றியடைய இப்படி செய்யப்பட்டுள்ளது என என்ன வேண்டுமானாலும் சொலுங்கள். இது என்னை வியக்கவே வைக்கிறது. நான் ஆச்சரியத்தில் இருக்கிறேன் என்றார்.

Summary

Regena Cassandra shares awe for Nayanthara’s star power ahead of Mookuthi Amman 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER