
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 டீசர் வெளியானது
நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் வெளியானது.
மூக்குத்தி அம்மன் 2 டீசர் - Youtube
நடிகை நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் வெளியானது.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அம்மனாக நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ எனும் பெயரில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மேலும், நவம்பர் 8 ஆம் தேதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 ஆம் தேதியில் மூக்குத்தி அம்மன் 2 வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழில் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மூக்குத்தி அம்மன் 2 வெளியிடப்படுகிறது.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி இயக்கியுள்ளார்.
Summary
Actress Nayanthara's Mookuthi Amman 2 teaser released
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






