விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான மூக்குத்தி அம்மன் - 2 ஓடிடி உரிமம்!

மூக்குத்தி அம்மன் - 2 ஓடிடி உரிமம் குறித்து..

நயன்தாரா

Published On :

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி ஆகியோரும் நடிகர்கள் யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்தாலும் இன்னும் வெளியீட்டைக் காணாமல் இருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ. 50 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் குடும்பமாக அதிகளவில் பார்க்கப்படும் என்பதால் பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Information has emerged regarding the OTT rights for the film Mookuthi Amman 2, starring actress Nayanthara.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.