மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மணிரத்னம் - விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

இயக்குநர் மணிரத்னம் நடிகர் விஜய் சேதுபதி திரைப்படம் குறித்து...

விஜய் சேதுபதி, சாய் பல்லவி, மணிரத்னம்

Published On :

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவியை வைத்து புதிய திரைப்படமொன்றை இயக்குகிறார். இப்படம் சென்னையைப் பின்னணியாக வைத்து உருவாகலாம் எனத் தெரிகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் சென்னை, பாண்டிச்சேரியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 20 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சாட்டிலைட் மற்றும் இசை உரிமங்கள் ரூ. 25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். இதனால், வெளியீட்டுக்கு முன்பே ரூ. 45 கோடி வரை இப்படம் வணிகம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போது, நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் புரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஸ்லம்டாக் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். சாய் பல்லவி ராமாயணா படத்தில் நடித்து வருகிறார்.

Information has emerged regarding the OTT rights for the new film directed by Mani Ratnam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.