தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக... பாக்யராஜ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை...

News image

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடன் மகன் சாந்தனு

Updated On :1 ஜூலை 2026, 1:35 pm IST

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் எழுதியதைப் போன்ற அறிக்கையை அவரது அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர், நடிகர் என இந்தியளவில் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக ஜூன் 27 அன்று திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் சோகத்தையும் வேதனையையும் அளித்தது.

தொடர்ந்து, பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு நடிகரும் பாக்யராஜ் மகனுமான சாந்தனு நன்றி தெரிவித்து பதிவுகளையும் வெளியிட்டார். இந்த நிலையில், பாக்யராஜ் அலுவலகம் சார்பில் அவர் எழுதியது போன்றே அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில்,

"சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது”

நான் எழுதுன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையோட பெரிய சந்தோஷமா மாத்துன என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன். அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக! அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க விரும்புகிறேன். என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். “இருக்கிறேன்" - பார்த்தீர்களா? இன்னும் ... கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் பார்வையாய்!

வரும் போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரஹ பிரவேசம் செய்துவிடும்.

Thanks!

எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது.

நன்றி சொல்வது மனித இயல்பு! நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே.

இனி நான்....

நல்ல சினிமாவில்,

நல்ல திரைக்கதையில்,

நல்ல வசனத்தில்,

இருப்பேன்!

அன்புடன்

உங்கள்

கே. பாக்யராஜ்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை சில ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொண்டாலும் இந்த நேரத்திலும் சாந்தனு வெற்றிக்காகத் தன் அப்பாவைப் பயன்படுத்துகிறாரே? என ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

A statement has been issued on behalf of the office of the late director Bhagyaraj, written in a style characteristic of him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.