தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புஷ்பா 2 ரன்னிங் டைம் 3 மணி நேரம் 21 நிமிஷம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் நீளம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

அல்லு அர்ஜுன்

Updated On :26 நவம்பர் 2024, 3:56 pm

DIN

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள்களாக நடைபெற்று வந்தது. ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினாலும் சில பிரச்னைகளால் தாமதமானது.

இதற்கிடையே, மூன்று முறைக்கு மேல் படத்தின் வெளியீட்டுத் தேதியும் மாற்றப்பட்டு இறுதியா டிச. 5 ஆம் தேதி உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி 100 மில்லியன் (10 கோடி) வரை டிரைலருக்கான பார்வைகள் கிடைத்துள்ளன.

பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமென்பதால் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக, அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்களிடம் வைராகியுள்ளன.

இந்த நிலையில் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 21 நிமிஷங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அனிமல் படமும் இதே அளவுக்கு வெளியானாலும் அதன் பரபரப்பான திரைக்கதையினால் நல்ல வரவேற்பு கிடைத்தது. சில படங்கள் 2 மணி நேரம் 30 நிமிடம் என்றாலும் 4 மணி நேரம்போல தோன்றுவதுண்டு.

தமிழில் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்கள் வெளியீட்டுக்குப் பிறகு படத்தின் நீளத்தை குறைத்த நிகழ்வுகளும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.