12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திருமணத்துக்குத் தயாரான சின்ன திரை தம்பதி!

சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன் வெற்றி வசந்த், பொன்னி தொடரின் நாயகி வைஷ்ணவியை திருமணம் செய்யவுள்ளார்.

வெற்றி வசந்த் - வைஷ்ணவி - இன்ஸ்டாகிராம்

Published On :

சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன் வெற்றி வசந்த், பொன்னி தொடரின் நாயகி வைஷ்ணவியை திருமணம் செய்யவுள்ளார்.

இவர்களின் திருமணம் வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருமணத்துக்கான முன்னேற்பாடுகளில் இருவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருமணத்தையொட்டி நண்பர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பொன்னி மற்றும் சிறகடிக்க ஆசை ஆகிய தொடர்களின் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் நாயகனாக நடித்து வருபவர் நடிகர் வெற்றி வசந்த். இவர் முத்து என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்பு யூடியூப் தொடர்களில் நடித்து பிரபலமானவர். தற்போது சிறகடிக்க ஆசை தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

இதேபோன்று ராஜா ராணி 2ஆம் பாகத்தில் பார்வதி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை வைஷ்ணவி. இவர், தற்போது பொன்னி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

வெற்றி - வைஷ்ணவி காதல்

வெற்றி வசந்த் - வைஷ்ணவி இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர். சென்னையில் கடந்த அக். 13 அன்று வெற்றி வசந்த் - வைஷ்ணவிக்கு திருமண நிச்சயதார்த்தத்தம் நடைபெற்றது.

இந்நிலையில் வரும் 28ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அழைப்பிதழையும் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதனையொட்டி நண்பர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சின்ன திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் தம்பதிக்கு நலங்கு வைத்து நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.

வெற்றி வசந்த் - வைஷ்ணவி தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் சின்ன திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.