தீவிர பயிற்சியும் ஐஸ் பாத் சிகிச்சையும்..! விஜய் தேவரகொண்டா தீவிரம்!

விடி12 படத்துக்காக தீவிரமான சண்டைக் காட்சிகளில் விஜய் தேவரகொண்டா நடித்து வருவதால் ஐஸ் பாத் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ் பாத் சிகிச்சையில் விஜய் தேவரகொண்டா.
ஐஸ் பாத் சிகிச்சையில் விஜய் தேவரகொண்டா.
Published on
Updated on
1 min read

விடி12 படத்துக்காக தீவிரமான சண்டைக் காட்சிகளில் விஜய் தேவரகொண்டா நடித்து வருவதால் ஐஸ் பாத் செய்து வருவதாக ஆங்கில ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. இவரது 13வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜூனில் வெளியானது. 

2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் இலங்கையில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா இதற்கிடையில் 13ஆவது படமென அறிவித்த பேமிலி ஸ்டார் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இவர் சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார் உடனும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விடி12 படத்துக்காக தீவிரமான சண்டைக் காட்சிகளில் நடித்து வருவதால் ஐஸ் பாத் செய்து வருவதாக ஆங்கில ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

”பல மணிநேர பயிற்சிகள், தீவிரமான சண்டைக் காட்சிகள் என உடலை தனது எல்லையை தாண்டி உழைத்து வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்த ஐஸ் பாத் சிகிச்சை தசைகள் சோர்வடைவதை தடுக்கும். அதனால் படப்பிடிப்பில் மீண்டும் அதிக விசையுடன் நடிக்க முடியும்” என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப்படம் மார்ச் 2025இல் வெளியாகவிருக்கிறது. இவரது அடுத்த இரண்டு படங்களை இயக்குநர்கள் ரவிகிரன் கோலா, ராகுல் சங்கராத்ரியன் இயக்கி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.