பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூன்றாவது நாளில் போட்டியாளர்கள் ரஞ்சித், ரவீந்திரன் இடையே மோதல் வெடித்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய நிலையில், 18 போட்டியாளர்களை தொகுப்பாளர் விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்.
முதல் நாளே, எவிக்சன் முறையில் நடிகை சாச்சனாவை வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் வாக்கெடுப்பு நடத்தி வெளியே அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய விதிமுறைகள்
இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே ஒரு கோடு போடப்பட்டு, வீடு இரண்டாக பிரிக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள் இடையே போட்டி என்று அறிவிக்கப்பட்டு, யாருக்கு எந்தப் பகுதி என்பதை தேர்வு செய்வதிலேயே பிரச்னை தொடங்கியது.
ஒரு வழியாக நிபந்தனைகளுடன் தனி படுக்கைகள் கொண்ட பகுதியை பெண்களுக்காக ஆண்கள் விட்டுக் கொடுத்தனர்.
ஆண்களும், பெண்களும் தங்களின் பகுதிகளுக்கு வரவேண்டும் என்றால் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர்களே கலந்தாலோசித்து முடிவெடுத்தனர்.
இதனிடையெ, ஆண்கள் வீட்டில் இருந்து ஒருவர் பெண்கள் வீட்டுக்கும், பெண்கள் வீட்டில் இருந்து ஒருவர் ஆண்கள் வீட்டுக்கும் தேர்வு செய்து அனுப்புமாறு பிக்பாஸ் ஒரு டாஸ்க்கை கொடுத்தார்.
இதில், ஆண்கள் ஒன்றிணைந்து முத்துக்குமரனை பெண்கள் வீட்டுக்கு அனுப்ப, பெண்கள் அணியில் யார் செல்வது என்பதை தேர்வு செய்வதில் பிரச்னை தொடங்கியது.
இறுதியில் பவித்ரா ஜனனியை ஆண்கள் வீட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்தனர்.
இதனிடையே, ஆண்களிடையே சண்டை வராமல் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக பெண்கள் முணுமுணுத்தது ஆண்களுக்கு கேட்டதோ என்னவோ இன்று மோதல் வெடித்துள்ளது.
இதையும் படிக்க : பிக் பாஸ் 8: ரவீந்திரனுக்கு உதவிய ரஞ்சித், அருண் பிரசாத்!
ரஞ்சித் - ரவீந்தர் மோதல்
மூன்றாவது நாள் நிகழ்ச்சிக்கான இரண்டு ப்ரோமோக்களை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அதில், முதல் ப்ரோமோவில் பவித்ரா ஜனனியை விஜே விஷால் ஒருமையில் பேசிய விவகாரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட, சக போட்டியாளர்கள் பிரச்னையை தீர்த்து வைக்கின்றனர்.
இரண்டாவது ப்ரோமோவில், நடிகர் ரஞ்சித்துக்கு தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, ரவீந்தர் கையை நீட்டிப் பேச, ‘கையை கீழே இறக்கு’ என்று ரஞ்சித் கூற மோதல் உச்சத்துக்கு சென்றது.
மேலும், ‘சண்டைக்கு வா’ என்று ரஞ்சித் எகிறிய நிலையில், சக போட்டியாளர்கள் இருவரையும் தடுக்கும் வகையில் ப்ரோமோ அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சின்ன திரையில் அறிமுகமாகும் பிக் பாஸ் ரியா!

உறியடி விஜய்குமாரின் புதிய படத்தில் பிக் பாஸ் சுபிக்ஷா!

பிக் பாஸுக்கு பிறகு கோயிலில் ஒன்றுகூடிய போட்டியாளர்கள்!

பிக் பாஸ் 9: வெற்றியாளர் திவ்யாவுக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

