

பிக் பாஸ் சீசன் 9 கோப்பையை வென்ற திவ்யா கணேஷுக்கு அவருடைய ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
திவ்யா கணேஷுக்கு பிக் பாஸ் சீசன் 9 கோப்பையுடன் ரூ. 50 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்து கோப்பையை வென்ற இரண்டாவது போட்டியாளர் என்ற பெருமையை திவ்யா பெற்றார்.
சமூக வலைதளங்களில் திவ்யாவுக்கு சக நடிகர்கள், அவருடைய ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்து பிக் பாஸ் 7வது சீசனை வென்ற அர்ச்சனாவுக்கு அடுத்தபடியாக இந்த சீசனின் கோப்பையை வென்றுள்ளார் திவ்யா.
திவ்யாவுக்கு அடுத்தபடியாக சபரிநாதன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். விக்கல்ஸ் விக்ரம் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 106 நாள்களுடன் நேற்று(ஜன. 18) நிறைவடைந்தது.
சென்ற வாரம், பாடகர் கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். கானா வினோத் போட்டியிலிருந்து வெளியேறியதால், திவ்யா கணேஷ், சபரிநாதன், சான்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகிய நான்கு பேர் நானினேஷனில் இருந்தனர்.
இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற சான்ட்ரா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15வது வாரமான இறுதி வாரத்துக்கு திவ்யா கணேஷ், சபரிநாதன், அரோரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகிய நால்வர் தேர்வாகினர்.
சென்ற வாரம் முழுவதும் இந்த 4 பேருக்கு மக்கள் வாக்களித்தனர். இதன் அடிப்படையில் அரோரா நேற்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், திவ்யா கணேஷ், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி, ப்ரஜின், ரம்யா ஜோ, வியானா, எஃப்ஜே, ஆதிரை, கனி திரு, அமித் பார்கவ், கமருதீன், விஜே பார்வதி, சுபிக்ஷா, சான்ட்ரா, அரோரா, திவ்யா கணேஷ், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என 24 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி 106 நாள்களுடன் நேற்று நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.