பிக் பாஸுக்கு பிறகு முதல்முறையாக... தாயுடன் விஜே பார்வதி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு பெற்றுக்கொண்டு வெளியேறிய பிறகு முதல்முறையாக வெளியே சென்றுள்ள விஜே பார்வதி குறித்து....
விஜே பார்வதி
விஜே பார்வதிபடம் - இன்ஸ்டாகிராம்
Updated on
2 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு பெற்றுக்கொண்டு வெளியேறிய பிறகு நீண்ட நாள்கள் கழித்து தனது தாயுடன் விஜே பார்வதி வெளியே சென்றுள்ளார்.

கோயிலில் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

விஜே பார்வதியுடன் ரெட் கார்டு பெற்றுக்கொண்டு வெளியேறிய கமருதீன், சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்துப் பேசினார். ரசிகர்கள் கமருதீனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களுடன் சேர்ந்து கமருதீன் நடனமாடிய விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்துவந்த விஜே பார்வதி, தனது தாயுடன் கோயிலுக்குச் சென்றுள்ளார். இதனால் விஜே பார்வதியின் ரசிகர்கள் அப்புகைப்படங்களில் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற 24 போட்டியாளர்களில் ஒருவராக விஜே பார்வதி இருந்தார். கமருதீனுடன் சேர்ந்து ஒவ்வொரு வாரமும் உற்சாகமாகவும் சச்சரவுகளுக்குப் பஞ்சமின்றியும் விளையாடிவந்தார்.

விஜே பார்வதி
விஜே பார்வதிபடம் - எக்ஸ்

13 வது வாரத்தில் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுபவருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. காருக்குள் அதிக நேரம் தாக்குப்பிடிப்பதே 8 வது போட்டியாக நடத்தப்பட்ட நிலையில், அதில் அநாகரிகமாக நடந்துகொண்டதற்காக விஜே பார்வதி மற்றும் கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கமருதீனுடன் விஜே பார்வதி
கமருதீனுடன் விஜே பார்வதிபடம் - எக்ஸ்

நடிகை சான்ட்ராவை போட்டி விதிகளுக்கு புறம்பாக மனிதாபிமானமற்ற முறையில் காரில் இருந்து உதைத்து வெளியேற்றியதற்காகவும், அநாகரிகமாக தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசியதாலும் விஜே பார்வதியும் கமருதீனும் வெளியேற்றப்பட்டனர்.

ரெட் கார்டு வாங்கியவர்கள் பிக் பாஸ் விதிகளின்படி நேர்காணல் அளிக்கக் கூடாது, இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரக்கூடாது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விஜே பார்வதி வெளியே செல்வதை தவிர்த்திருந்தார்.

விஜே பார்வதி
விஜே பார்வதி படம் - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு தனது தாயுடன் அவர் கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆனால், விஜே பார்வதி முன்பு போன்று இல்லாமல், சற்று உடல்நலக் குறைவுடன் காணப்படுவதைப்போன்று தெரிவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தவறு செய்வது மனித இயல்பு என்றும், அதனால் மனம் உடைந்துவிடக் கூடாது, அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என விஜே பார்வதிக்கு பலரும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.

விஜே பார்வதி
பிக் பாஸ் 9 வெற்றியாளர் திவ்யா கணேசன்! 2வது இடம் யாருக்கு?
Summary

VJ Parvathi stepped out for the first time after Bigg Boss 9 tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com