பிக் பாஸ் 9 வீட்டில் கடைசி குறும்படம்! யாருடையது தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடைசி குறும்படம் திரையிடப்பட்டுள்ளது.
திவ்யா , விக்கல்ஸ் விக்ரம் , அரோரா
திவ்யா , விக்கல்ஸ் விக்ரம் , அரோரா
Updated on
2 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடைசி குறும்படம் திரையிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் மிகவும் அரிதாகவே குறும்படங்கள் திரையிடப்படும் நிலையில், தற்போதைய குறும்படம் எதைப்பற்றியது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 14 வது வாரத்தை எட்டியுள்ளது. போட்டியின் வெற்றியாளர் யார் என்பது இந்த வாரத்தின் இறுதியில் தெரிந்துவிடும்.

கானா வினோத், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம், சான்ட்ரா, திவ்யா கணேசன், அரோரா ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இதில், பணப்பெட்டியில் உள்ள ரூ. 18 லட்சமே போதும் என்று அப்பெட்டியை எடுத்துக்கொண்டு கானா வினோத், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக சாண்ட்ரா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்த எபிஸோட் இன்று இரவு ஒளிபரப்பாகும்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் அரோரா, திவ்யா கணேசன், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் என நான்கு பேரே எஞ்சியுள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் மக்கள் வாக்களிப்பார்கள். அதிக வாக்குகளைப் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

பிரவீன்ராஜ் / வியானா
பிரவீன்ராஜ் / வியானாபடம் - எக்ஸ்

இந்நிலையில், கடந்த வாரத்தில் முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைக்கப்பட்டனர். வார இறுதி நாளில் அவர்களை அழைத்துவைத்து விஜய் சேதுபதி பேசியபோது, அவர்க்ளுக்கு குறும்படம் திரையிடப்பட்டது.

அக்குறும்படத்தில், கானா வினோத் பணப்பெட்டியை எடுக்கும்போது அரோராவும் விக்கல்ஸ் விக்ரமும் சிரித்துக்கொண்டிருந்ததாக வியானா கூறுகிறார். மேலும், கானா வினோத்தை பெட்டியை எடுக்கத் தூண்டிவிட்டு, அது வெற்றியடைந்ததும் அரோரா சிரித்ததாக வியானா குற்றம் சாட்டுகிறார். இக்காட்சி குறும்படமாக போட்டியாளர்கள் அனைவருக்கும் திரையிட்டு காட்டப்பட்டது.

இதேபோன்று பிரவீன்ராஜும், விக்கல்ஸ் விக்ரம் குறித்து வஞ்சகமாகப் பேசுகிறார். கானா வினோத் பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டால், வெற்றி பெறுவது எளிது என நினைத்து விக்கல்ஸ் விக்ரம் சிரித்ததாகக் கூறுகிறார். ஆனால், வெளியேறும்போது அழுவதைப்போன்று நடிக்கிறார்கள் என்றும் விமர்சித்திருந்தார். இக்காட்சியும் குறும்படத்தில் இடம்பெற்றது.

இந்தக் குறும்படத்தைக் கண்ட விக்கல்ஸ் விக்ரம், மனிதாபிமானமற்ற முறையில் போட்டியாளர்கள் பேசியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். கானா வினோத் பெட்டியை எடுத்துக்கொண்டது விளையாட்டாக எண்ணியதால் சிரித்ததாகவும், பிறகுதான் உண்மையிலேயே அவர் பெட்டியை எடுத்துக்கொண்டதை உணர்ந்ததாகவும் விக்கல்ஸ் விக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சென்றுள்ள வியானா, பிரவீன்ராஜ் உள்ளிட்டோரின் செயல்களை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாததால், வெற்றி பெற்றவர்கள் மீது அவதூறு பேசுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

திவ்யா , விக்கல்ஸ் விக்ரம் , அரோரா
பிக் பாஸ் 9: இறுதி வாரத்துக்கு முன்னேறிய 4 போட்டியாளர்கள்! வெளியேறியது யார்?
Summary

final short film in the Bigg Boss 9 house Do you know whose it is

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com