தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

குத்துச்சண்டை வீரராக ஆண்டனி வர்கீஸ்!

மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

ஆண்டனி வர்கீஸ்

Published On :

மலையாளத்தில் 2017இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆண்டனி வர்கீஸ்.

இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு, அஜகஜந்தாரம் ஆகிய படங்களில் கவனம் பெற்றார்.

கடந்தாண்டு ஆர்டிஎக்ஸ் படத்தில் நடித்திருந்தார். தமிழ் சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவு மாஸ்டர்கள் உடன் சாம் சிஎஸ் பின்னணி இசையும் கவனம் பெற்றது.

இந்நிலையில், ஆண்டனி வர்கீஸின் பிறந்தநாளை முன்னிட்டு தாவீத் என்ற புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

கோவிந்த் விஷ்ணு இயக்கியுள்ள இந்தப் படத்தை பனோரமா ஸ்டூடியோஸ், சென்ட்சுரி மாக்ஸ் ஜான் மாரி புரடக்‌ஷன்ஸ் எல்எல்பி இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்துக்கு ஜஸ்டின் வர்கீஸ் இசையமைக்கிறார். ஆஷிக் அபு கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டரில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.