கேம் சேஞ்சர் புதிய வெளியீட்டுத் தேதி!
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் மற்றும் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: சரத்குமார் - சண்முக பாண்டியன் படத்தின் பெயர் அறிவிப்பு!
தமன் இசையமைப்பில் உருவான இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. இந்தியன் - 2 தோல்விக்குப் பின் கேம் சேஞ்சர் மூலம் ஷங்கர் மீண்டு வருவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக, இப்படத்தை டிச. 20 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...