ஷாருக்கானின் கிங் வெளியீட்டுத் தேதி!

ஷாருக்கானின் கிங் வெளியீடு குறித்து...
நடிகர் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான்
Updated on
1 min read

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் கிங் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருகான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் என்கிற ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இக்கூட்டணி பதான் திரைப்படத்தின் மூலம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் கிங் திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ரூ. 350 கோடியில் உருவாகிவரும் இப்படத்தில் நடிகர்கள் தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், அனிருத் இசையமைக்கும் இப்படத்தை இந்தாண்டு டிச. 24 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டுத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Summary

actor sharukh khan's king release date announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com