மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ.
விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. அதேமாதிரி முதல்நாள் வசூலிலும் படம் சாதனை படைத்தது.
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடித்திருந்தனர்.
கோட் படம் லியோ அளவுக்கு வசூலில் வெற்றிபெறவில்லை. தற்போது விஜய் 69 படத்தினை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து கூலி படத்தினை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், லியோ திரைப்படம் வெளியாகி ஒருவருடம் ஆனதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
பல் நினைவுகள், பல கற்பிதங்கள், பலவிதமான ஆச்சரியமான தருணங்கள். லியோ எப்போதும் எனது மனதுக்கு நெருக்கமான ஒரு படமாகும். இதை நிகழ்த்தியதுக்கு மிக்க நன்றி விஜய்ணா.
தங்களது வியர்வையும் ரத்தத்தையும் கொடுத்து இந்தப் படத்துக்காக உழைத்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன் என்றார்.
So many learnings, so many memories, so many exciting moments â¤ï¸
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 19, 2024
The film that will always stay close to my heart, #Leo ð¥ð§
Love you so much @actorvijay na for making it happen ð¤ð¤â¤ï¸
Eternally grateful to all the people who have spent their sweat and blood for this film,⦠pic.twitter.com/nbcaKz1ptR
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







