பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சூர்யா 44 கேங்ஸ்டர் படமில்லை..! ரிலீஸ் குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யா 44 படத்தின் ரிலீஸ் குறித்து பேசியதாவது...

நடிகர் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

Published On :18 அக்டோபர் 2024, 1:22 pm IST

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. அதன்பின், ஊட்டி, கேரளத்தில் நடைபெற்றது.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த சூழலில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இப்படத்தில், சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது:

சூர்யா 44 கேஸ்டர் படமில்லை. காதல் கதையுடன் கூடிய அதிகமான சண்டைக் காட்சிகள் இருக்கும். எனக்கு மிகவும் நீண்ட நாள்களாக காதல் கதையை படமாக்கும் எண்ணம் இருந்தது. அதிலும் சூர்யா சார், பூஜா ஹெக்டேவை வைத்து படம் பண்ணும்போது மிகுந்த ஆவலாக இருந்தது.

படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்தாலும் இந்தப்படம் அடுத்தாண்டு கோடைக்காலத்தில்தான் வரும். ஆனால், ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. போஸ்ட் புரடக்‌ஷன், இசைக்கு அதிக நேரம் செலவிடுகிறோம். வேலையை ரசித்து செய்கிறோம். ரிலீஸ் தேதி அழுத்தம் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.