பிரபாஸின் தி ராஜா சாப் டீசர் அப்டேட்!
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டீசர் குறித்த அப்டேட்.


பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.
சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. சமீபத்தில் வெளியான கல்கி 2989 ஆயிரம் கோடி வசூலித்து அசத்தியது.
தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிக்கும் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை மருதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் நாளை (அக்.23) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு ஏப்.10ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸின் 25வது படம் அனிமல் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...