பிரபாஸின் தி ராஜா சாப்! ரூ. 200 கோடி வசூலைக் கடந்தது!

பிரபாஸின் தி ராஜா சாப் திரைப்படத்தின் வசூல் விவரம்...
பிரபாஸின் தி ராஜா சாப்! ரூ. 200 கோடி வசூலைக் கடந்தது!
Updated on
1 min read

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள தி ராஜா சாப் படத்தின் வசூல் விவரங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் நகைச்சுவை, ஆக்‌ஷன், ஹாரர் கலந்த படமாக கடந்த ஜன. 9 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியானது.

இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஹாரர் ஃபேண்டசி காட்சிகளில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் பணிகள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

உலகம் முழுவதும் தி ராஜா சாப் திரைப்படம் முதல் நாளே ரூ.112 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில், 4 நாள்களில் ரூ. 201 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை என்பதால், தி ராஜா சாப் மேலும் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Prabhas's 'The Raja Saab' crosses the ₹200 crore mark in box office collections!

பிரபாஸின் தி ராஜா சாப்! ரூ. 200 கோடி வசூலைக் கடந்தது!
பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com