சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

தமிழ் உணர்வை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வாய்ப்பு பராசக்தி என சிவகார்த்திகேயன் பேச்சு...

சிவகார்த்திகேயன் - படம் - டான் பிக்சர்ஸ்

Published On :14 ஜனவரி 2026, 4:07 pm IST

பராசக்தி படத்தில் நடித்தது வாழ்நாள் பெருமை அளிப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பராசக்தி போன்ற கதையம்சமுள்ள படத்தில் நடித்தால் காலத்துக்கும் என் பெயர் பேசப்படும் என்று நினைத்து நடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம், கடந்த 10-ஆம் தேதி வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ரசிகர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

''பராசக்தி படத்தைப் பார்த்து விட்டு குட்டிப் பையன் ஒருவன் தீ பரவட்டும், தமிழ் வாழ்க என்று விடியோவில் பேசியுள்ளார். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பு மக்களிடமும் பராசக்தி படம் சென்று சேர்ந்துள்ளது. இயக்குநர் சுதா கதை கூறும்போதே, நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரம் என்பதால் பராசக்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

தமிழ் உணர்வை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வாய்ப்பாக இதனைக் கருதினேன். இப்படத்தில் நடித்தால் காலத்துக்கும் பேசப்படுவேன் என நினைத்தேன். ஒரு நடிகராக பாராட்டப்படுவேன் என நினைத்தேன். அவை அனைத்தும் நடந்துள்ளன'' என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

தணிக்கை குழுவின் ஆட்சேபனைக்கு உரிய காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழுடன் வெளியான பராசக்தி, 2 நாள்களில் உலகளவில் ரூ. 51 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

lifelong honor Acting in Parasakthi says Sivakarthikeyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.