மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

‘ஸ்டார் படத்தின் குறைகளைச் சொன்னேன். ஆனால்..’: கவின் பகிர்ந்த அனுபவம்!

ஸ்டார் படத்தின் அனுபவம் குறித்து நடிகர் கவின் பேசியது...

News image
Updated On :22 அக்டோபர் 2024, 11:17 am

நடிகர் கவின் ஸ்டார் படத்தின் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து, டாடா படத்தின் மூலம் கவின் பிரபலமடைந்தார். அதன் பிறகு, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவான ‘ஸ்டார்’ படத்தில் நடித்தார்.

இப்படம், கடந்த மே.10 ஆம் தேதி எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும், உலகளவில் ரூ.25 கோடி வரை வசூலித்தது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் கவின், “ஸ்டார் படத்தின் கதையைக் கேட்கும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் படத்தில் நடிக்கிறோம். ஆனால், படமாக்கப்பட்ட பின் சில காட்சிகள் கதையைப் பாதிக்கும் வகையில் இருந்தது. இயக்குநரிடம் அந்தக் குறைகளையும் 20 நிமிடங்கள் வரை படத்தின் நீளத்தைக் குறைக்கவும் சொன்னேன். ஆனால், எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அப்படியே படத்தை வெளியிட்டார்கள். நான் நினைத்ததுபோல் கலவையான விமர்சனங்களையே பெற்றது” எனக் கூறினார்.

கவின் நடிப்பில் உருவான பிளடி பெக்கர் திரைப்படம் வருகிற அக். 31 ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.