நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார்.
நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தயாரித்து இருந்தனர்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி திரைக்கு வந்த மெய்யழகன் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : அமரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
இந்த நிலையில், மெய்யழகன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று (அக். 25) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது, விமர்சனங்களை தொடர்ந்து, சில காட்சிகள் நீக்கப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் நீக்கம் செய்யப்படாத காட்சிகளுடன் முழுமையாக படம் வெளியாகிள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் காண வேண்டிய காமெடி திரைப்படங்கள்!

மெய்யழகன் படத்துக்கு சிறந்த ஒலிக்கலவைக்காக தேசிய விருது!

மா இண்டி பங்காரம்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 17 - 23)

ஓடிடியில் வெளியானது நஸ்லனின் மாலிவுட் டைம்ஸ்!
விடியோக்கள்

தவெக இதைச் செய்ய வேண்டும்: மு. வீரபாண்டியன் வலியுறுத்தல்! | CPI | TVK |



