விஜய்யின் கோட் திரைப்படம் அதிக திரைகளில் வெளியாகிறது.
நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. படத்தின் புரமோஷன் நேர்காணல்களால் விஜய் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் ஆந்திரத்திலும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
முக்கியமாக, கேரளத்தில் இதுவரை டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே இப்படம் ரூ. 1.50 கோடியை ஈட்டியுள்ளது. மேலும், கேரளத்தில் மட்டும் முதல்நாளில் 700 திரைகளில் 4000 காட்சிகளுடன் கோட் வெளியாகிறது.
இதுவே, கேரளத்தின் இதுவரையிலான மிகப்பெரிய வெளியீடு என அப்படத்தின் கேரள உரிமம் பெற்ற ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் கோட் முதல் நாளில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்றே தெரிகிறது.