கோட் திரைப்படத்தின் படக்குழுவினர் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் செப். 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், படக்குழுவினர் பெற்ற சம்பளம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான கோட்டில் நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் பெற்றிருந்ததை படத்தின் தயாரிப்பாளரே உறுதிசெய்திருந்தார்.
விஜய்க்கு அடுத்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ரூ. 10 கோடியையும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரூ. 3 கோடியையும் பெற்றுள்ளனர்.
மேலும், நடிகர்களான பிரபு தேவா ரூ. 2 கோடி, பிரஷாந்த் ரூ. 75 லட்சம், ஜெயராம் ரூ. 50 லட்சம், அஜ்மல் ரூ. 50 லட்சம், மோகன் ரூ. 40 லட்சம் மற்றும் நடிகை ஸ்நேகா ரூ. 30 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபோக, முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர்கள் மீனாட்சி சௌத்ரி, லைலா, யோகிபாபு, வைபவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் கோட் வசூல் சாதனை புரியும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.