
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கலக்கியது.
இந்தப் படத்துக்குப் பிறகு சிபி சக்ரவர்த்தி நடிகர் ரஜினியுடன் படம் எடுப்பதாக இருந்து கைவிடப்பட்டது. பின்னர் தெலுங்கு நடிகர் நானியுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல் வெளியானது.
இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து படம் எடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
கடந்த செப்.1ஆம் தேதி பேச்சுலர் பார்டி சிபி சக்ரவர்த்தியால் நடத்தப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன், சிவாங்கி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சிபி சக்ரவர்த்திக்கு வர்ஷிணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது திரைப்பிரபலங்கள் இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஈரோட்டில் நடைபெற்ற ரிஷப்ஷன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன.
இந்த நிகழ்வில் அட்லி, எஸ்.ஜே.சூர்யா, சிவகார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.