நானி 32: ரிலீஸ் தேதியுடன் படத் தலைப்பு அறிவிப்பு!

தெலுங்கு நடிகர் நானியின் 32ஆவது படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
நானி 32 அறிவிப்பு விடியோ
நானி 32 அறிவிப்பு விடியோ
Published on
Updated on
1 min read

தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.

நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் ஆக.29இல் வெளியாகியது.

நானி 32 அறிவிப்பு விடியோ
கோட் டிக்கெட் விலை ரூ. 2,000?

நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்தப் படம் 5 நாள்களில் ரூ.75.26 கோடி வசூலித்துள்ளது.

நானி 32

இந்நிலையில் நானியின் 32 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹிட் 3 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குகிறார் சைலேஷ் கொலனு.

ஏற்கனவே ஹிட் படங்கள்ன் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய ஹிட் அடித்தன. தற்போது 3ஆவது பாகத்தில் நானி நாயகனாக நடிக்கிறார்.

நானி 32 அறிவிப்பு விடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு தளபதியை கொண்டாடுங்கள்..! வெங்கட் பிரபு வெளியிட்ட விடியோ!

நானியின் முதல் திரைப்படம் அஷ்ட சம்மா திரைப்படம் 2008ஆம் ஆண்டு செப்.5ஆம் தேதி வெளியானது. 16 வருட திரைத்துறையின் நிறைவு காரணமாக இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இந்தப் படம் அடுத்தாண்டு மே மாதம் 1ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

வால்போஸ்டர் சினிமா & அனானிமஸ் புரடக்‌ஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் சர்க்கார் கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.