நடிகர் விஜய் நடிப்பில் உலகமெங்கும் இன்று (செப்.5) கோட் திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டாசு வெடித்து ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா 2ஆவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். தொடக்கத்தில் பாடல்கள் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் இறுதிக் கட்டத்தில் வெளியான பாடல்களும் டிரைலரில் வந்த பின்னணி இசையும் வரவேற்பு பெற்றன.
கோட் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் யுவனின் இசையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் யுவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:
உங்களது அன்புக்கு நன்றி மக்களே. தளபதிக்கு எனது அன்பை வெளிப்படுத்த வாய்ப்பளித்த ஏஜிஎஸ் அகோரம் சார், அர்ச்சனா கல்பாத்திக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இது எனது சகோதரர் வெங்கட் பிரபு இல்லாவிட்டால் நடந்திருக்காது எனக் கூறியுள்ளார்.