பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆலியா பட்டின் ஜிக்ரா: டீசர், டிரைலர் அப்டேட்!

நடிகை ஆலியா பட் நடித்துள்ள ஜிக்ரா படத்தின் டீசர், டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிக்ரா போஸ்டர். - படம்: எக்ஸ் / ஆலியா பட்

Published On :

ஹிந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலிய பட் 2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமானார். கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.

ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.

ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவருகிறார் ஆலியா பட் ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நடிகர் ரன்பீர் கபூரை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ராஹா எனும் பெண் குழந்தை கடந்தாண்டு டிசம்பரில் பிறந்தது.

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் கணவர் ரன்பீருடன் லவ் அன்ட் வார் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் நடிகை ஆலியா பட் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

ஜிக்ரா படம் வரும் அக்.11ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை வாசன் பாலா இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர், டிரைலர் செப்.8ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு தற்போது ஆலியா பட் ஆல்ஃபா படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படமும் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.