பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அமரன் டப்பிங் பணிகள் துவக்கம்!

அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணி துவங்கியுள்ளது...

சிவகார்த்திகேயன்.

Published On :

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில், மறைந்த இராணுவ வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைமந்த இராணுவ வீரரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் டப்பிங் பேசும் விடியோவை பகிர்ந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.